இந்திய அரசியலமைப்பில் மனிதவுரிமைகள் :

இந்திய அரசியலமைப்பில் மனிதவுரிமைகள் :
(1)சமத்துவ உரிமை
(2)சுதந்திர உரிமை பேச்சுரிமை
(3)எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமை
(4)ஒன்று படும் உரிமை
(5)சங்கங்கள் அமைக்கும் உரிமை.
(6)நடமாடும் உரிமை.
(7)குடியேறி வசிக்கும் உரிமை
(8)பணி செய்யும் உரிமை.
(9)சுரண்டலுக்கெதிரான உரிமை
(10)சமய சுதந்திர உரிமைகள்
(11)கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகள். சொத்துரிமை.
(12)அரசியலமைப்பிற்குட்பட்டு பரிகாரம் பெறும் உரிமை.

ஒருவர் மாநில மனித உரிமை அல்லது தேசிய மனித உரிமை ஆணையம் என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம். மாநில ஆணையத்தில் புகார் செய்தபின் தேசிய ஆணையம் அவ்வழக்கை மேற்கொள்ளாது. தேசிய ஆணையத்தில் புகார் செய்தபின் மாநில ஆணையம் அப்புகாரை மேற்கொள்ளாது. (ஒரே நேரத்தில் ஒரு வழக்கை இரு ஆணையங்கள் மேற்கொள்ளாது). புகார் பெற்றபின் அதற்குரிய புகார் பெற்றதற்கான இரசீது கொடுக்கப்படும்.

நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?

கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

1.கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.

2.கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.

3.கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

4.கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5.தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்

6.காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்…

7.கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

8.கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

9.கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.

10.கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

11.கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம். அழைப்பாணை :
புகார் மனுவில் கூற்ப்பட்டுள்ள நபருக்கு ஆணையம், அவர் குறித்து விசாரணை தேவையென்க் கருதினால் அவருக்கு அழைப்பாணைகள் (சம்மன்ஸ்) அனுப்பி ஆணையத்துக்கு வர ஆணையம் பணிக்கின்றது.
புகார்தாரர் அல்லது புகார் தாரரின் அதிகாரம் பெற்ற வேறொரு நபர் (வழக்குரைஞர் தான் என்பதில்லை யார் வேண்டுமானாலும் அதிகாரம் பெற்றவராக)ஆணையத்தில் முன்னிலையாதல் (ஆஜர்) வேண்டும்.
வழக்கிற்கு தேவையெனக் கருதினால், சாட்சியங்கள் அல்லது மற்றெவரேனும் தேவைப்படீன் ஆணையம் அவர்களுக்கும் அழைப்பாணைகள் (சம்மன்ஸ்)அனுப்பினால் முன்னிலையாதல் (ஆஜர்) வேண்டும்