இரட்டை இலை வழக்கு: அக்.30க்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை அக்.30-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை, தேர்தல் ஆணையத்தில் நேற்று நடந்தது.

தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி முன்னிலையில் நடந்த விசாரணையின் போது, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக பிரமாண பத்திரங்கள் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய தினகரன் தரப்பினர் அனுமதி கோரினர். ஆனால், தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, விசாரணையை அக்.30-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. அக்.31-க்குள் விசாரணை முடிவை அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையி்ல், அன்றே தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஓபிஎஸ் ஆதரவு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனுவில், ‘எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மை என்பது, எதிர்தரப்பினருக்கு கிடையாது. எனவே, இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், பழனிசாமி தரப்புக்கு வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.