இளம் பெண்ணிடம் பலாத்கார முயற்சி: ஆசிரியர் கைது

ஊத்தங்கரை, :ஊத்தங்கரை அருகே, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அரசு பள்ளி ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா, கோவிந்தாபுரம் அடுத்த நடுவூரைச் சேர்ந்தவர், மதியழகன் மனைவி உமாராணி, 24. அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்த மதியழகனுக்கு, சாப்பாடு கொடுப்பதற்காக நேற்று முன்தினம் இரவு, உமாராணி சென்றார்.அப்போது, நடுவூரைச் சேர்ந்த சிலம்பரசன், 28, உமாராணியின் கையை பிடித்து இழுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.உமாராணி சத்தம் போடவே, சிலம்பரசன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உமாராணி, தன் கணவர் மதியழகனிடம் கூறியுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார், ஊத்தங்கரை அடுத்த அத்திபாடி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் சிலம்பரசனை கைது செய்தனர்.