காவல் நிலையங்களில் குற்ற வழக்கு பதிய தவறினால் ?

குற்ற வழக்கு பதிய தவறினால் ?
சட்டபடியான ஒரு கடமையை செய்ய ஒரு புலனாய்வு அதிகாரி தவறும்போது, அதாவது, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு, 154 இன் படி வழக்கு பதிவு செய்ய தவறும்போது, , இந்திய தண்டனை சட்டம் பிரிவு 217 இன் படி, அது ஒரு குற்றம், “ஒருவரை சட்டபடியான தண்டனையிலிருந்து காப்பாற்றும் உட்கருத்துடன், அல்லது அதனால் அவரை அநேகமாக காப்பாற்ற கூடும், அல்லது அவர் ஆளாக கூடிய தண்டனைக்கும் குறைந்த தண்டனையை அடைய செய்ய கூடும் என்று அறிந்து, அல்லது சொத்தை காப்பாற்றும் உட்கருத்துடன் அல்லது அதனால் சொத்து எதையும் தண்ட இழப்பிநின்றும் அல்லது சட்டப்படி அது உள்ளாக்கபட்டிருக்கும் பொறுப்பு எதனின்றும் தம்மால் அநேகமாக காப்பாற்றப்பட கூடும் என்று அறிந்திரிக்கிற ஒரு பொது ஊழியர் என்ற முறையில் அவர் நடந்து கொள்ள வேண்டிய வகைக்கான சட்டத்தின் உத்தரவு எதனையும் அறிந்தே கீழ்படியாத அத்தகைய பொது ஊழியராக இருக்கிற எவராயினும் அறிந்தே கீழ்படியாத அத்தகைய பொது ஊழியராக இருக்கிற எவராயினும் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கபடுதல் வேண்டும்…