கொலை செய்யப்பட்ட குற்றவாளி, நான் அமைதியாக இருக்க ரூ. 5 ஆயிரம் கொடுத்தார் – குற்றம்சாட்டிய பெண் பேட்டி

நாகாலாந்து மாநிலத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தாக குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளி, சிறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் தான் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டதாக குற்றம்சாட்டிய பெண் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், குற்றவாளி, சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று எனக்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்தார், அதனை நான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தேன். என்று கூறியுள்ளார். குற்றவாளி என்னுடைய அண்டைய வீட்டாளர்… பாலியல் பலாத்காரத்தை அடுத்து, எனுக்கு பணம் கொடுத்த அவர், நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார். நான் பணத்தை பெற்றுக் கொண்டேன். பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். என்று கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 23-ம் தேதி இச்சம்பவத்தில் கூட்டு குற்றவாளி என்னை சாப்பிடுவதற்காக அழைத்தார். நான் தனியாக இருக்கிறேன் என்று அவர் கூறினார், அதனால் நான் அவருடன் சாப்பிட செல்ல முடிவுசெய்தேன். பின்னர் நான் அவர் தனியாக இல்லை என்பதை தெரிந்துக் கொண்டேன், அவர் குற்றவாளியுடன் இருந்ததை தெரிந்து கொண்டேன். இதனையடுத்து நான் வரவில்லை என்று கூறினேன். ஆனால் கூட்டு குற்றவாளி நான் இருக்கும் வரையில் எதுவும் ஆகாது என்று கூறினார். பின்னர் கூட்டு குற்றவாளி போலிக் காரணம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் குற்றவாளி என்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். என்று கூறியுள்ளார்.

இருப்பினும், பொதுமக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சையத் பரீத்கானின் உறவினர்கள், பெண்ணின் பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டு தொடர்பான மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளனர். நாகாலாந்தில் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய இளைஞர் சையத் பரீத்கானை, பொதுமக்கள் சிறையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அடித்துக் கொலை செய்தனர். இச்சம்பவம் அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.