தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் (2003)

தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் (2003) மிக அதிக வட்டி வசூலிப்பதை தடை செய்வதற்காக 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் 2003-ல் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க ஆட்களை கொண்டு அப்பாவிகள் மீது நடத்தப்படும் கராரான கீழ் தர நடவடிக்கையால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது போன்ற நிலையை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய  புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்.

பெயர்
இருப்பிட முகவரி, புகார் எழுந்த நிகழ்விடம் மற்றும் முகவரி
நாள் மற்றும் நிகழ்வின் காலம் ஆகியவன புகாரில் தெறிவிக்க வேண்டும்.

மனித உரிமை மீறல்களின் விரிவான/சுறுக்கமான விவரங்கள் எந்த பொது ஊழியர் குறித்து புகார் அல்லது துறையினர் குறித்து புகார். நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளனவா/தீர்ப்பாயம்/வேறு பிற ஆணையங்களில் நிலுவையில் உள்ளனவா? இடர்/ துயர்/பதிலீடு குறித்து வேண்டுவன…
குறிப்பு:-

தண்டனை வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது தடை, அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ 30,000 அபராதம் பரிந்துரைக்கலாம்.

இந்த அவசர சட்டத்தின் கீழ், போலீசார் “மணிநேர வட்டி”,”கந்து வட்டி”, “மீட்டர் வட்டி” மற்றும் “தண்டல்” போன்ற ஆடம்பரமான பெயர்களில் தினமும் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்களுக்கு எதிரான புகார்களை கருத்தில் எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.