திருமண சட்டம் & குழந்தை திருமண தடை சட்டம், தொழிலாளர்கள் சட்டம்

 2009க்கு முன்பு திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசிமில்லை. அப்போது மூன்று வகையான திருமண பதிவுச் சட்டங்கள் இருந்தன.

1.இந்து திருமணச்சட்டம்

2.தனி திருமணச் சட்டம்

3.கிறிஸ்துவ திருமணச் சட்டம்.

இந்த மூன்று வகையான சட்டங்களில் ஒன்றில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறையே 2009க்கு முன்பு வரை இருந்தது.

2009க்கு பிறகு, இந்த மூன்று வகை திருமண சட்டங்களில் ஏதேனும் ஒன்றில் திருமணத்தை பதிவு செய்தாலும் மீண்டும் தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் – 2009-ன்படி கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். ஆதலால் மேற் சொன்ன மூன்று வகையான திருமண பதிவுச்சட்டங்களில் பதிவு செய்வது அவசியம் இல்லாமல் போகிறது. எனவே தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் – 2009-ன் படி மட்டுமே திருமணங்களை பதிவு செய்தால் போதும் இத்திருமணங்களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை இந்த மாதம் பார்ப்போம்.
தமிழ் நாடு திருமணச் சட்டம் – 2009ன் படி திருமணம் நடந்த 90 தினங்களுக்குள் திருமணத்தை பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பதிவுச செய்யவேண்டும்.

திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் ரூ.100/- மட்டுமே.

திருமணம் முடிந்து 91 முதல் 150 நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத கட்டணம் ரூ.50/-ம் சேர்த்து மொத்தம் ரூ.150/- செலுத்தவேண்டும்.

திருமணம் முடிந்து 150 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு திருமணச் சட்டம்-2009-ன்படி பதிவு செய்ய முடியாது.

150 நாட்களுக்கு பிறகும் பதிவு செய்யாதவர்கள் மீது அந்த பகுதி பதிவாளர் குற்ற நடவடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்ட விதி முறை வகுக்கப்பட்டுள்ளது. எனவே இனி திருமணம் செய்து கொள்ளும் அனைவரும் 90 நாட்களுக்குள் இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்.

திருமணம் எங்கு நடந்ததோ அந்த பகுதிக்கான பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்ய முடியும். (மூன்று வகையான திருமணச் சட்டத்தில் திருமணம் நடந்த பகுதி பதிவாளர் அலுவலகம் அல்லது பெண் வீடு உள்ள பகுதி பதிவாளர் அலுவலகம் அல்லது மாப்பிள்ளை வீடு உள்ள பகுதி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும் வகையில் விதி முறை உள்ளது).

திருமணத்தன்று ஆணுக்கு வயது 21-ம் பெண்ணுக்கு வயது 18-ம் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக கீழ்கண்ட ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.

திருமண பத்திரிக்கை.
கோவில்/சர்ச்/பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாக கொடுக்கும் ஆவணம்.

திருமணம் நடந்ததிற்கான வேறு ஆதாரங்கள் (நோட்டரி அபிடிவிட், போன்ற ஆவணங்கள்)

முகவரிக்கான ஆதாரமாக கீழ்க்கண்ட ஒன்றில் ஏதேனும் ஒன்று கொடுக்கப்படவேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை
குடும்ப அட்டை
ஓட்டுனர் உரிமம்
பாஸ்போர்ட் அல்லது விசா

வயதுக்கான சான்றாக கீழ் கண்ட ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
பிறப்புச் சான்று, பள்ளி – கல்லூரிச் சான்று, பாஸ்போர்ட்/விசா

மூன்று சாட்சிகள் கையெழுத்திட வேண்டும். சாட்சிகள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கணவன் -4, மனைவி 4 போட்டோக்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்-2009-ன் படி பதிவு செய்யத் தனியாக விண்ணப்ப படிவம் உள்ளது. http://www.tnreginet.net/english/forms.asp என்ற இணைப்பிலிருந்து 4 பக்க விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருமணத்தை பதிவு செய்ய புரோக்கர்கள் ரூ5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வாங்கிக் கொள்கிறார்கள். ரூ.100/- மட்டும் செலுத்தி திருமணத்தை பதிவு செய்யுங்கள்….

குழந்தைத் திருமணம்:-

குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம். இதன்படி 23 வயதிற்குக் குறைவான ஆண் 21 வயதுக்கும் குறைவான பெண் (பிரிவு 2 (a)) ஆகியோருக்கு இடையில் நடக்கும் திருமணம் குழந்தைத் திருமணமாகும்.

இந்தச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பலர், கீழ்க்காணும் செயல்கள் நடக்க அனுமதித்தால் தண்டிக்கப்படுவார்கள். குழந்தைத் திருமணத்தை செய்து தருகிறேன் என்று ஒப்புக்கொண்டு நடத்தித்தரும் ஒப்பந்தக்காரர், இந்தத் திருமணத்தை நடத்தித் தருவது அல்லது இதில் சம்பந்தப்படுவது, போன்றவை குற்றமாகும். இதில் தொடர்புடையவர்கள்:

18 வயதுக்கு மேலும், 21 வயதிற்குக் கீழும் உள்ள ஆண் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டு அதில் ஈடுபட்டால், அவருக்குச் சாதாரண சிறைத் தண்டனை 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீட்டிப்பு மற்றும் ரூ 1000/- வரை அபராதம் (அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் சேர்ந்தே விதிக்கப்படலாம்) (பிரிவு – 3)

குழந்தைத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் ஆண் 21 வயதிற்கு மேற்பட்டிருந்தால், அவருக்கு 3 மாத சிறைத் தண்டனை மற்றும் அபராதம் (பிரிவு – 4).

இத்தகைய குழந்தைத் திருமணத்தைத் தனக்குத் தெரியாமலே நடத்தி வைத்ததாக நிரூபிக்க முடியாமல் போகும் நபருக்கு, 3 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் (பிரிவு – 4).

இந்தத் திருமணத்தை நடக்க அனுமதித்த, அல்லது நடப்பது குறித்து உதாசீனம் செய்து அலட்சியமாக இருந்த, அல்லது குழந்தைத் திருமணம் நடத்த எந்த வகையிலாவது உதவி புரிந்த பெற்றோர் மற்றும் பாதுகாவலர் சிறைத் தண்டனையும், அபராதமும் பெறுவார் (பிரிவு – 6)

குழந்தைத் திருமணம் நடைபெறுவதைத் தடுக்க முடியுமா?
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 1929-ன் படி, குழந்தைத் திருமணம் நடக்க இருக்கிறது என்று யாராவது காவல்துறைக்குப் புகார் தெரிவித்தால், இந்தத் திருமணம் நடைபெறாமல் தடுக்க முடியும். புகாரைப் பெற்றுக்கொண்டவுடன். காவல் துறையினர் விசாரித்து, அதன் பின் இந்த விஷயத்தை மாஜிஸ்டிரேட்டிடம் எடுத்துச் செல்வார்கள். நீதிபதி, இதைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்தத் தடை மூலம் இந்தத் திருமணத்தைத் தடுக்க முடியும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை, ரூ 1000 அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்க முடியும்.

குழந்தையைத் தொழிலாளியாக அடமானம் வைக்கும் தொழிலாளர் சட்டம் 1993 :

பெற்றோர் அல்லது பாதுகாவலர் என யாராக இருந்தாலும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தையைத் தொழிலாளியாக வேலை செய்யவதற்காக அடமான ஒப்பந்தம் செய்வது, என்பது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் செல்லாதது இவ்வாறான ஒப்பந்தத்தில் ஈடுபடும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அக்குழந்தையை வேலைக்கு வைத்துக்கொள்பவர்கள் பொறுப்பாளர் ஆகியோர் தண்டனை பெறுவார்கள்.

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 :
கொடுத்த கடன் தொகைக்கு ஈடாகக் கட்டாயமாக வேலை செய்ய வைப்பதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. கொத்தடிமையாவதற்குக் காரணமாக இருந்த எல்லா விதமான கடன் ஒப்பந்தங்கள் மற்றும் பிற ஒப்புதல் விவரங்கள் போன்றவை இந்தச் சட்டத்தின்படி செல்லாததாகக் கருதப்படும். கொத்தடிமை முறையில் வேலை செய்யும்படி யாரையும் வற்புறுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இம்மாதிரியாகத் தங்களது குழந்தைகளை பிற குடும்ப உறுப்பினர்களைக் கொத்தடிமை முறைக்கு உட்படுத்தும் பெற்றோர்களும் தண்டனைக்கு உரியவர்கள்தாம்.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டம் 1986 :
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சூழல்களில் 14 வயதுக்கு உட்பட்டவர்களை வேலைக்கு வைப்பது சட்டப்படி தண்டனைக்கு உரியது. தீங்கு விளைவிக்காத இடங்களில் வேலை செய்வது முறைப்படுத்தவும் சட்டம் இருக்கிறது.

இளம் சிறுவருக்கான நீதி முறை (குழந்தைகளைப் பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த) சட்டம் -2000 :

இந்தச் சட்டத்தின் 24-வது பிரிவில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இடங்களில் குழந்தைகளை வேலை செய்ய வைப்பது, கொத்தடிமை முறையில் வேலை வாங்குவது, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தைப் பிடித்து வைத்துக்கொள்வது போன்றவை தண்டனைக்கு உரியவை.
கீழே குறிப்பிட்டுள்ள சட்டங்கள், குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடைசெய்வது, மற்றும்/அல்லது அவர்கள் பணி புரியும் சூழலை ஒழுங்குபடுத்துவது, முதலாளிகளைத் தண்டிப்பது ஆகியவற்றுக்கான சட்டப் பிரிவுகள்:

தொழிற்சாலைகள் சட்டம் 1948
தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951
சுரங்கங்களுக்கான சட்டம் 1952
வாணிகக் கப்பல் போக்குவரத்துச் சட்டம்
பயிற்சிப் பணியாளர் சட்டம் 1961

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961
பீடி மற்றும் சுருட்டுத் தொழிலாளர்கள் (வேலை இடங்களின் நிலவரம் குறித்த) சட்டம் 1966

டபுள்யு.பி. கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1963
கற்பழிப்புக்கான அதிகபட்சத் தண்டனை ஏழு வருடங்கள். ஆனால், கற்பழிக்கப்பட்ட பெண் 12 வயதிற்குள் இருந்தாலோ, கற்பழித்தவர் அதிகாரப் பதவிகளில் இருப்பவராக இருந்தாலோ (மருத்துவமனைகளில், குழந்தைகள் காப்பகத்தில், காவல் நிலையம்) இந்தத் தண்டனை மேலும் அதிகமாக இருக்கும்.

சிறுவனுடன் பலவந்தமாகப் பாலியல் உறவு, கற்பழிப்புக்கு இணையான செயல் என்றாலும், கற்பழிப்புச் சட்டத்தில் இது சேர்க்கப்படவில்லை. சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆட்படுத்துவது போன்றவற்றைக் கவனிக்கும் அல்லது தண்டிக்கும் சிறப்பான சட்டங்கள் ஏதும் இல்லை என்றாலும், இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 377ஆம் பிரிவு, இயற்கைக்குப் புறம்பான குற்றச் செயல்கள் என்ற விதத்தில் இவற்றைக் கையாள்கிறது.

தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம் – 1965
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரி லாபமாக முதலாளிகள் சம்பாதிக்கும் லாபத்தொகையில் இருந்து, தொழிலாளிகளுக்கும் பங்கு தரப்பட வேண்டும் என்கிற சமூக நீதிக் கோரிக்கையில் பிறந்ததுதான் தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம் – 1965 (Payment of Bonus Act – 1965). இச்சட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு மீதூதியம் (Bonus) வழங்கப்பட்டு வருகிறது.

நோக்கம்:
இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கினை வழங்குவதற்கான மீதூதியம் வழங்கும் சட்டம் 1965-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பினை நிர்ணயித்து மீதூதியம் குறித்த தொழிற்தகராறுகளைத் தவிர்ப்பது என்று விளக்கப்பட்டுள்ளது.