பழைய படங்களுக்கு தொடரும் டிஜிட்டல் வடிவில் மவுசு

1970,1980-கள் திரையுலகின் பொற்காலம் என்று கோலிவுட்டில் வர்ணிக்கப்படுகிறது. அந்த காலகட்டத்து படங்களுக்கு புது மவுசு பிறந்திருக்கிறது. சிவாஜி நடிப்பில் 1964ம் ஆண்டில்  வெளியான கர்ணன், கடந்த 3 வருடங்களுக்கு முன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ரீ ரிலீஸ் ஆனது. அடுத்து சிவாஜியின் வசந்தமாளிகை, கமல், ரஜினி நடித்த நினைத்தாலே இனிக்கும் டிஜிட்டலில் மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. எம்ஜிஆர். மஞ்சுளா நடித்த ரிக்‌ஷாக்காரன் விரைவில் டிஜிட்டல் வடிவில் திரைக்கு வருகிறது.

1973ம் ஆண்டு திரைக்கு வந்த படம் சூரியகாந்தி. முத்துராமன், ஜெயலலிதா நடித்திருந்தனர். திரைக்கு வந்து 44 வருடங்கள் கடந்த பிறகு தற்போது இப்படம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதுடன், சினிமாஸ்கோப்பிற்கும் மாற்றப்பட்டுள்ளது. ஏ.எஸ்.பிரகாசம் கதை வசனம் எழுத முக்தா வி.சீனிவாசன் இயக்கி இருந்தார். கஜலட்சுமி ரிலீஸ் செய்கிறார். மற்ற படங்கள் கலரில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டது. இப்படம் கருப்பு வெள்ளையிலேயே டிஜிட்டல் மற்றும் ஸ்கோப்பிற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

Continued demand for old photos