பொது சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்

மகளிர் தன்மை இழிவு படுத்தி காட்டுவதைத் ( தடையுறுத்தும் ) சட்டம் – 1986  பிரிவு – 3  மகளிர் தன்மை இழிவுபடுத்திக் காட்டும் விளம்பரங்களைத்  தடையுறுத்துதல் தண்டனை : இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 1,00,000 ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கலாம்.

இந்திய தண்டனைச் சட்டம் – 1860 பிரிவு – 371 வாடிக்கையாக ஒருவரை அடிமையாக வைத்து வணிக தொழில் செய்தல்  தண்டனை :  பத்தாண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம்

இந்திய தண்டனைச் சட்டம் –  1860   பிரிவு – 356 ஒருவர் கொண்டு செல்லும் பொருளை திருட முயலும் நோக்கத்தோடு தாக்குதல் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துதல்  தண்டனை : இரண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபாரதம் இரண்டுமோ  விதிக்கப்படும்.

இந்திய தண்டனைச் சட்டம் – 1860  பிரிவு – 404  இறந்து போனவரிடம் அவரது இறப்பின் போது இருந்த பொருளை நேர்மையற்ற முறையில் கையாடல் செய்தல்  தண்டனை : ஏழாண்டுகளுக்கான சிறை தண்டனை.

சச்சரவு (Affray):-

பொதுப் பாதை, சந்தை பொதுப் பூங்கா போன்ற பொது இடங்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதுண்டு ‘சண்டை’ என்றால் ஒருவரையொருவர் வாய் வார்த்தையால் திட்டிக் கொள்ளலாம் அல்லது அடித்துக் கொள்ளவும் சொய்யலாம். அதாவது இருவருக்குள் வாய்ச் சண்டை முற்றி ஒருவர் மற்றொருவரை அடிப்பதற்குக் கையை ஒங்குவதும் அந்த மற்றொருவரும் திருப்பி அடிக்கப் போவதுமாகக் கூறித் தம் கையை ஒங்குவதும் நடந்தாலே அது சண்டை தான் அதுபோல் வாய்ச்சண்டை முற்றி ஒருவர் மற்றொருவரை அடித்து விடுவதும் சண்டைதான். இச்செயல், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுன் அமைதியைக் குலைப்பதேயாகும். அவர்கள் மனதில் அச்சத்தை உண்டு செய்வதாகும் இதைத்தான் இந்திய தண்டனைச் சட்டமானது தனது 159 -வது பிரிவின் வாயிலாக ‘சச்சரவு’……..என்று கூறுகின்றனர்