ரஜினிக்கு சிக்கலை தந்த பத்ம விருது!

ந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதுகளின் பட்டங்களை தன்  சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்த கூடாது என சட்ட விதிகள் உள்ளது  . அதிலும், பத்ம விருதுகள் வாங்கும் பிரபலங்கள்  தன்  திரைப்படத்திலோ, விளம்பரத்திலோ, படத்தின் டைட்டில்  கார்டிலோ நிச்சயமாக பயன்படுத்தக் கூடாது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படம் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளது . கபாலி படத்தினை எதிர்த்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரஷின வேதிகே என்கிற அமைப்பு சென்சார் போர்டிடம் புகார் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த புகாரில், விதி 18(1)-ன் கீழ் பத்ம விருதுகளை பெயருக்கு முன் சேர்ப்பதில்  தடை உள்ளது எனவும் , அப்படியிருக்க  ‘கபாலி’ படத்தின் டைட்டில் கார்டில் பத்ம விபூஷன் ரஜினி என திரையிடப்படுவது சட்டப்படி குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனையடுத்து தேசிய விருதை அவமதித்த விவாகாரத்தால் ரஜினிக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது …